கொழும்பு,
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்தியா-இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யோகேந்திர படோரியா, 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து 198 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 79 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய தரப்பில் ராதிகா பிரசாத், 3.2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கேப்டன் விக்ராந்த் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.