‘மனிதம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
அதில் இயக்குநர்கள் பாக்கியராஜ், R.V.உதயகுமார், அரவிந்தராஜ், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் R.V. உதயகுமார், ” திருப்பாச்சி மற்றும் சிவகாசி திரைப்படங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் இவ்வளவு ஃபேமஸ் ஆகி இருப்பாரா? இந்த இரண்டு படங்கள் இல்லையென்றால் விஜய் கட்சியை ஆரம்பித்திருக்க முடியுமா? நான் இப்படி சொன்னதற்கு இதற்கு எனது தம்பி விஜய் கோபித்து கொள்ள மாட்டார்.
இரண்டு திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள்தான் விஜய்யை இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆக்கி இருக்கிறது. விஜய்யை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கின்றது. விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக இந்த இரண்டு திரைப்படங்களும் இருக்கின்றது. அதை அவர் மறந்து விடக் கூடாது” என்று பேசியிருக்கிறார். R.V. உதயகுமாரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.