சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்., ”தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23-01-2025): தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். […]