ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஷ்காரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ‘பைகா’ பழங்குடியின குடும்பத்தினர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உணவருந்த உள்ளனர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை இவர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.