சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் அனைத்தும் போட்டிகளும் துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி சென்று விளையாடாது என அறிவித்தது. இதனிடையே இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில், தொடரை நடைபெறும் பாகிஸ்தான் பெயரை அச்சிட இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் தெரிவித்தது. அதில், பிசிசிஐ கிரிக்கெட்டிற்குள் அரசியலை கொண்டு வருகிறது. முதலில் பாகிஸ்தான் வந்து விளையாட மறுத்தது. பின்னர் இந்திய கேப்டனை குழு புகைப்படம் எடுக்க அனுப்ப மறுத்தது. தற்போது ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட மறுத்துள்ளது எனப் புகார் தெரிவித்திருந்தது. 

மேலும் படிங்க: ரத்தாகும் டங்ஸ்டன்? நாளை (ஜன.23) ‘குட் நியூஸ்’ வரும் – அண்ணாமலை!

பிசிசிஐ விளக்கம் 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது ஐசிசி ஜெர்சி தொடர்பான விதிமுறைகளை பிசிசிஐ கடைப்பிடிக்கும். 

லோகோ மற்றும் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்கிறதோ, அதே விதிமுறைகளைப் பின்பற்றுவோம். ஆனால் ஐசிசி ஊடக நிகழ்ச்சிகளுக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். 

இந்தியாவுக்கான போட்டிகள் 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி பிப்.20ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோதுகிறது. இந்த போட்டிகள் அனைத்துமே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

மேலும் படிங்க: வீர தீர சூரன் பார்ட் 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.