தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!

நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று விளையாட உத்தரவிட்டது. 

பொதுவாக காயம் ஏற்பட்ட போது தான் இந்திய வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணிக்குள் வருவார்கள். ஆனால் இந்த படுதோல்விகளால் விரக்தி அடைந்த பிசிசிஐ, இந்திய அணியில் யாராக இருந்தாலும் சரி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பையில் பங்கேற்று விளையாடுகின்றனர். ரஞ்சிக் கோப்பையின் இரண்டாம் கட்ட போட்டிகள் இன்று (ஜன.23) தொடங்கி உள்ளது. 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!

சொதப்பிய ரோகித், கில்

இதில் மும்பை அணிக்காக யஸ்ஷவி ஜெய்ஸ்வால், ரோகித சர்மா களமிறங்கினர். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், ரோகித் சர்மா 3 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளனர். 

அதேபோல் கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக இன்று (ஜன.23) சுப்மன் கில் களம் இறங்கி 4 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணியில் கடுமையாக சொதப்பிய நிலையில், ரஞ்சியில் விளையாடி தங்களது ஃபார்மை மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்கள் மிகச் சொதப்பலாக விளையாடி உள்ளனர். 

நட்சத்திர வீரர்களால் வாய்ப்பை இழந்த இளம் வீரர்

மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக 17 வயது ஆயுஸ் மத்ரே மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் ரோக்த் சர்மா இருவரும் களம் இறக்கப்பட்ட நிலையில், இளம் வீரர் ஆயுஸ் மித்ரேவு தன்னுடைய இடத்தை இழந்துள்ளார். நட்சத்திர வீரர்கள் களம் இறங்குகிறார்கள் என்பதால் ரசிகர்களின் வருகை இருந்தது. ஆனால் நட்சத்திர வீரர்கள் இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

களமிறங்கப்போகும் ரிஷப் பண்ட்

இவர்களைப் போலவே இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். அந்த அணி சவுராஸ்டிரா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா அல்லது இவர்களைப் போலவே சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ… மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.