ரோகித், ரஹானே விக்கெட்டை அள்ளிய ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் யார்?

Umar Nazir Mir, Ranji Trophy | இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் ரஞ்சிக்கோப்பையிலும் தொடர்கிறது. அவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காக இன்று களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் நசீர் மிர் கைப்பற்றினார். ரஹானே விக்கெட்டையும் அவரே கைப்பற்றி கவனத்தையும் ஈர்த்தார். இதனால் மும்பை அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழக்க நேரிட்டது.

மும்பை சரத்பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் மும்பை – ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் ரஹானே பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி யஷஸ்வி ஜெய்ஷ்வால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் புகுந்தனர். இவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. 

யஷஸ்வி ஜெய்ஷ்வால் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ரஹானே 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்ததால் மும்பை அணி கவுரமாக 100 ரன்களை கடக்க நேரிட்டது. இல்லையென்றால் மிக மோசமான ஸ்கோரில் ஆல்வுட்டாகியிருக்கும். ஜம்மு காஷ்மீர் அணியின் சிறப்பான பந்துவீச்சை மும்பை அணி எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். அதேபோல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை அணியை விட 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. ஜம்மு காஷ்மீர் அணியை ஒப்பிடும்போது மும்பை அணியில் இருக்கும் எல்லா பிளேயர்களும் சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் மற்றும் ஐபிஎல் பிளேயர்கள். ஆனால் அவர்கள் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, தனுஷ் கோடியன் ஆகியோரும் படுமோசமாக பேட்டிங் ஆடினர்.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் தொடர்ச்சியாக பேட்டிங் படுமோசமாக ஆடுவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மிக மோசமான பார்மில் இருக்கும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கப்போகிறார். இதே பார்மில் அவர் இருந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால் ரோகித் சர்மாவுக்கு பதில் வேறு பிளேயரை கூட இந்திய அணியில் சேர்த்து விடுங்கள் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.