அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை துவங்கியதை அடுத்து 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற மூன்று நாட்களில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இது. “டிரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத குடியேறி குற்றவாளிகளைக் கைது செய்தது,” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் சமூக தளமான X இல் பதிவிட்டுள்ளார். மேலும் “நூற்றுக்கணக்கானோர்” இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர் என்றும் கூறினார். […]