சென்னை பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று தமிழக காஙகிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”இன்று பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபடி போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழகத்தின் கபடி பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. […]