சென்னை: சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்றவர்கள் அத்துமீறி வீட்டிற்குள்ளே வந்தால், அவர்களை தாக்க தயாராக, நாம் தமிழர் கட்சியினர் உருட்டு கட்டைகளை கைகளில் வைத்திருந்தது தொடர்பாக, காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. பெரியார் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் வீட்டை முற்றுகையிட பெரியார் அமைப்புகள் வந்த நிலையில், அதை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சியினரும் அங்கே குவிந்தனர். ஏராளமானோர் சீமான் வீட்டிற்குள் பாதுகாப்பாக நின்றிருந்தனர். அவர்களின் பலரது கைகளில் உருட்டு கட்டைகள், கரும்புகள் போன்றவை […]