விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `பனி விழும் மலர்வனம்’. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ரயான். பிக்பாஸ் சீசன் 8 வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
டாஸ்க் பீஸ்ட் என பிக்பாஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் டிக்கெட் வென்று முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் இவர் தற்போது `பனிவிழும் மலர்வனம்’ தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருந்த தேஜங்க் நடிக்கிறாராம். ரயான் நடித்திருந்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம் இன்று வெளியாகி இருக்கிறது. சினிமாவில் கவனம் செலுத்தத் தொடரிலிருந்து விலகியிருக்கலாம் எனச் சிலர் கமென்ட் செய்து வருகின்றனர்.
விஜே அக்னியும், ப்ரீத்தி சர்மாவும் ஆரம்பத்தில் கமிட் ஆன தொடர் `மலர்’. முதலில் அந்தத் தொடரிலிருந்து அக்னி விலக அவருக்குப் பதிலாக நடிகர் சுரேந்தர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ப்ரீத்தி சர்மா விலகலுக்குப் பிறகு விக்ரம் வேதா தொடரில் நடித்திருந்த அஷ்வதி இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது மலர் தொடர் நிறைவடைந்திருக்கிறது. அந்தத் தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிவடைந்திருக்கின்றன. 500+ எபிசோடுடன் இந்தத் தொடர் நிறைவடைந்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையின்போது விஜய் டிவி டாப் டிஆர்பியை தொட்டிருக்கிறது. அமரன், மெய்யழகன் உட்படத் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையின் போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
அந்தப் படங்கள் டிஆர்பியில் ஹிட் அடித்திருக்கின்றன. அமரன் திரைப்படம் 8.5 TVR உடன் 2 கோடி பார்வையாளர்களையும், 1.2 பில்லியன் பார்வை நேரத்தையும் பெற்றிருக்கிறது.
மெய்யழகன் திரைப்படம் 7.4 TVRயையும் பெற்றிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `புனிதா’. இந்தத் தொடரில் தெய்வானை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி குமார். இவர் நடிகர் கிஷோரைக் காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில் ப்ரீத்தி பொங்கல் வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் `Coming Soon’ என்கிற ஹேஷ்டேக்கினையும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய ரசிகர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். வாழ்த்துகள் ப்ரீத்தி – கிஷோர்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…