கவுகாத்தி,
நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி அசாம் மாநிலம் சோனித்பூரில் பாதுகாப்புப்படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 36 கையெறி குண்டுகள் உள்பட வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.