உ.பி.யில் வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி சுருட்டல்: 30 பேர் கொண்ட சைபர் மோசடி கும்பலை சுற்றிவளைத்த தமிழர் இளமாறன் ஐபிஎஸ்

புதுடெல்லி: உ.பி. மாவ் மாவட்​டத்​தில் ஒரு கிராமத்​தில் வசிப்​பவர் வங்கிக் கணக்​கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்​கப்​பட்​டது. இதில் சந்தேகப்​பட்ட மத்திய பொருளாதார குற்​றப்​பிரி​வினர், இதுகுறித்து விசா​ரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்​பாளரான (எஸ்​.பி.) ஜி.இள​மாறனுக்கு தகவல் அளித்​தனர். தமிழ்​நாட்​டின் மன்னார்​குடி கருவாச்​சிக் கிராமத்​தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்​துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்​வில் வெற்றி பெற்​றவர்.

இவரது விசா​ரணை​யில், வங்கிக் கணக்கை வைத்​துள்ளவருக்கு மாதம் ரூ.10,000 கொடுத்து விட்டு வேறு யாரோ அதை பயன்​படுத்தி வருவது தெரிந்​தது. மேலும், அந்த கும்பல் கோரக்​பூர் மாவட்​டத்​தில் இருந்து சைபர் குற்​றங்​களில் ஈடுபடு​வதும், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் 3 வீடு​களில் தங்கி​யிருப்​பதும் தெரியவந்தது.

ஒரே நேரத்​தில் சுற்றிவளைப்பு: இதையடுத்து அவர்கள் ஒரே நேரத்​தில் வீட்​டில் இருக்​கும் போது, இளமாறன் போலீஸ் படையுடன் சென்று கும்பலை சுற்றி வளைத்​தார். திரைப்​படங்​களில் வரும் காட்​சியை போல் 30 பேர் கொண்ட கும்பலை ஒரே நேரத்​தில் சுற்றிவளைத்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்திய விசா​ரணை​யில், ரம்மி விளை​யாட்டு​களில் ஒன்றை சட்ட​விரோதமாக நடத்​தி​யது, வரி ஏய்ப்பு செய்​தது, பொது​மக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டு​ களில் மட்டும் இந்த கும்பல் ரூ.70 கோடி அளவுக்கு மோசடி செய்​துள்ளது. இந்த மோசடிக்காக கிராம மக்கள் சிலருக்கு மாதந்​தோறும் பணம் கொடுத்து அவர்​களுடைய வங்கி கணக்​குகளை பயன்​படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதமிழடம் எஸ்.பி. இளமாறன் கூறும்​போது, “முதல் முறையாக விளை​யாடு​பவர்​களுக்கு ரூ.10,000 வரை வெற்றி பணமாக அளித்து இந்த கும்பல் தங்கள் வலைகளில் சிக்க வைக்​கிறது. இக்கும்​பலின் தலைவனை யாரும் நேரில் பார்த்தது இல்லை. அவர் வெளி​நாடு​களில் இருந்து மோசடி​யில் ஈடுபடு​வதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.