திருநெல்வேலி: இறந்த தாயின் உடலை அவரது, ஏழை மகன் சைக்கிளில் கட்டி, சுமார் 15 கி.மீ தூரம்முள்ள சொந்த ஊருக்கு தள்ளிச்சென்ற சோகம் அரங்கேறி உள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சோக சம்பவங்கள் இதுவரை வட மாநிலங்களில்தான் நடைபெற்று வந்தன. தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டிலும், அதுவும் நெல்லை சீமையில் அரங்கேறி இருப்பது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் பகுதியைச் சேர்ந்த, சிவகாமியம்மாள் […]