சென்னை: மக்களின் எதிர்ப்பு காரணமாக, டங்ஸ்டன் திட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்தது. இதையடுத்து, அரிட்டாப்பட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மதுரை செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாளை மதுரையில் நடைபெறுகிறது. அரிட்டாபட்டியில் நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மூர்த்தி தலைமையில் அந்த பகுதி மக்கள் இன்று காலை தலைமைச்செயலகத்தில் நேரில் அழைப்பு விடுத்தனர். இதை […]