டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், 95 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய […]