சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும், சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளான, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பிரபலமானகோவில்கள் என பல பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே போலீசார், மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
