கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அந்தக் கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
“கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், ‘மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர். அந்த மனுக்கள் எல்லாம் கோதூர் பகுதியில் உள்ள குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பண்டல்களாகச் சேகரித்து அந்த துறை ரீதியான அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய நிலையில், குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. ஏழை மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களில், தையல் இயந்திரம் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டி பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் அவை” என்பதை அவர் குறிப்பிட்டதோடு, அவற்றை வாசித்தும் காண்பித்தார்.
மேலும், தொண்டர்கள் மத்தியில், அந்த கோரிக்கை மனுக்கள் அடங்கிய பண்டலைப் பொதுக்கூட்ட மேடையில் தூக்கிப்பிடித்து, “தி.மு.க ஆட்சியில் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் குப்பையில் வீசப்படும் நிலை தான் உள்ளது” என்று குற்றம்சாட்டி பேசி முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.