முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்… முருங்கை சாகுபடி செய்வது எப்படி? வழிகாட்டும் பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வரும் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (EDII) மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் “லாபம் கொடுக்கும் முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல்” என்ற தலைப்பில் நேரடி பயிற்சி முகாம் பிப்ரவரி 1ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த  நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும்தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முருங்கை

இந்த பயிற்சியில் கலந்துகொள்வதால் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் முதன்மை செயல் அதிகாரி வசந்தன் செல்வனிடம் பேசியபோது, “முருங்கை இலையினை சத்துக்களின் கோட்டை என்றும் வல்லுணவு (super food) என்றும் குறிப்பிடுவோம். ஏனெனில் அவற்றில் ஏராளமான சத்துகள் அடங்கியிருக்கின்றன.

பொதுவாகவே இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களுக்கு  மதிப்பு அதிகம். அந்த வகையில் இயற்கை முறையில் முருங்கை சாகுபடி செய்வது எப்படி? என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. முருங்கை சாகுபடியின் போது விவசாயிகள் அறிய வேண்டிய தொழில்நுட்ப முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகிறோம்.

வசந்தன் செல்வன்

ஒரு நாளில் 10 கிராம் முருங்கை இலை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுப்பெற உதவும். இயற்கை முறையில் விளைவித்த முருங்கையினை எவ்வாறு எல்லாம் பதப்படுத்தலாம்? குறைந்த செலவில் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்களை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் சுத்தமாக மற்றும் அறிவியல் சார்ந்து எவ்வாறு செயல்முறைபடுத்த வேண்டும் போன்றவற்றை பற்றிய தெளிவான மற்றும் விரிவான விளக்கம் அளிக்கப்படும். 

முருங்கை இலையை மூலப்பொருளாக வைத்து எவ்வாறு முருங்கை பவுடர், முருங்கை காப்சூல், தேநீர் , முருங்கை சூப் மிக்ஸ் மற்றும் ரைஸ் மிக்ஸ், முருங்கை லட்டு போன்ற மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மதிப்பு கூட்டல் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல் என்பது குறித்தும், வாடிக்கையாளர்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

அறிவிப்பு

இங்கு தயாரிப்பதற்கு பயிற்சியளிக்கும் அனைத்து பொருட்களுமே முருங்கை இலையை மூலதனமாக வைத்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. முருங்கை டேப்லெட் மற்றும் கேப்சூல் என்பது எளிதாக முருங்கை இலை உட்கொள்வதற்கான வழியாகும். இந்தியாவைவிட ஸ்விட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் தினம் தோறும் முருங்கை கேப்சூலை எடுத்துக்கொள்வதனை வழக்கமாக வைத்துக்கொள்கிறார்கள்.

ஏனெனில் அங்கு முருங்கை இலையோ, முருங்கை பவுடரோ கிடைப்பது மிக அரிது. எனவே, இதுபோன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. முருங்கை இலையை நன்றாக காய வைத்து பொடியாக்காமல் கட் லீவ்ஸ் (cut leaves) மாதிரி எடுத்துக்கொண்டு அதனை டிப் டீ (dip tea) போன்றவற்றை தயாரிக்கும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்க இருக்கிறோம்.

இவற்றை செய்வதற்கு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (fully automatic) மற்றும் செமி ஆட்டோமேட்டிக் (seminar automatic) போன்ற மெஷின்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. கூடுதல் சிறப்பாக வாடகைக்கு மெஷின்களை உபயோகப்படுத்துவதற்கான வசதிகளும் இம்மையத்தில் செய்து தரப்படுகின்றன. இதுகுறித்து தொழில் முனைவோர்களுக்கு சிறந்த விளக்கம் அளிக்க இருக்கிறோம். முருங்கை சூப் மிக்ஸ் மற்றும் ரைஸ் மிக்சினை சுடுநீருடன் கலந்து உட்கொள்ளலாம்.

அறிவிப்பு

கொதிக்க வைக்க வேண்டிய தேவையில்லை. முருங்கை லட்டினை இயற்கை முறையில் நாட்டுச்சர்க்கரை உபயோகப்படுத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்த விளக்கமும் அளிக்க இருக்கிறோம். இவற்றில் 15 சதவிகிதம் முருங்கை இலை இடம் பெற்றிருக்கும். எளிதாக உண்ணக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. முருங்கை இலை விளைவிப்பது முதல் ஏற்றுமதி வரை வழி காட்டுகிறோம். இக்காலகட்டத்தில் பயன்பாட்டாளர்கள் அதிகம். ஆனால் உற்பத்தியாளர்கள் தான் குறைவான அளவில் இருக்கிறார்கள். நீங்கள் உற்பத்தி செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தால் வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். சான்றிதழுடன் கூடிய விரிவான பயிற்சி அளிக்கிறோம்” என்றார்.

நாள் : 01-02-2025 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை .

இடம்: இடம்: தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDII), தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

கூகுள் மேப் லிங்க்:

https://maps.app.goo.gl/sqPi38tLPubpxpcA7

பயிற்சி கட்டணம்: 1,200 ரூபாய்

(பயிற்சியில் நோட் பேட், பேனா, தேனீர் , சான்றிதழ், மதிய உணவு போன்றவை வழங்கப்படும்).

அறிவிப்பு

பயிற்சி கட்டணம் ரூபாய் 1200 /-செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் . 

கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு: 99400 22128

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.