இயக்குநர் மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை தாண்டி, அது ஒரு ‘எவர்கிரீன் ஹிட்’ என்றே சொல்லலாம். இப்போது வரை அந்தப் படத்தின் புரோபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டில் உள்ளது.
இந்தப் படம் குறித்த சீக்ரெட் ஒன்றை தற்போது கூறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர், “நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் வைத்து இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கடைசி எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல், ‘தில் சே’ படத்தை இயக்கினேன்.
தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் ‘எது மிஸ் ஆகிறது’ என்பதை முன்னர் நினைத்தேனோ, அதை கண்டுபிடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.
2000-ம் ஆண்டு, அலைபாயுதே மாதவன் – ஷாலினி நடிப்பில் வெளிவந்தது. இதே படம் ஹிந்தியில் 2002-ம் ஆண்டு ‘சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஷாட் அலி இயக்கத்தில் விவேக் ஓபராய் – ராணி முகர்ஜி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.