மெல்போர்ன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வந்தது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான இத்தாலியின் ஜானிக் சினெர், 2-ம் நிலை வீரரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஜானிக் சினெர் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார்.