நாகை: நாகூர் தர்காவில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 400 ஆண்டுகால பழமையான பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மகா ராஜாவில் கட்டித் தரப்பட்ட நாகூர் தர்கா பெரிய மினரா முழுவதும் இந்திய அரசின் கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது, அதை போல் நாகூர் ஆண்டவர் சமாதியின் நேர் மேல் உள்ள தங்க கலசமும் இந்திய அரசு கொடியின் நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
நாகூர் தர்கா அலங்கார வாசலில் அமைந்துள்ள நாகூர் தர்கா அலுவலகம் முன்பு வழக்கம் போல் இந்திய அரசின் கொடி ஏற்றப்பட்டு கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி புனித பாத்தியா ஓதி பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. நாகூர் தர்காவில் உள்துறை காவலாளிகள் உள்ளிட்ட நாகூர் தர்கா நிர்வாகிகள் வீரக்கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி சுல்தான் கலீபா சாகிபு பாத்திஹா ஆரம்பிக்க நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜா மொய்தீன் சாஹிப் புனித துவா ஓதினார். நாகூர் தர்கா பிரசிடெண்ட் செய்யது முகமது கலீபா சாகிப் கொடியேற்றினார். நாகூர் தர்கா முன்னாள் மானேஜிங் டிரஸ்டிகள் அபுல் பதஹ் சாகிப், ஷேக் ஹசன் சாகிப் இந்த நிகழ்வில் தலைமை ஏற்று நடத்தினர்.