லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் கூறுகையில், பாரம்பரிய முறைப்படி திரிவேணி சங்கமத்தில் 11 முறை மூழ்கி புனித நீராடும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. இந்த மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குபின் நடைபெறுகிறது. சகிப்புத்தன்மையுடனும், நல்லிணக்கத்துடனும் நாம் அனைவரும் முன்னேறி செல்ல வேண்டுமென கடவுளிடம் நாம் பிராத்திக்கிறோம். மக்கள் நலனுக்காக நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம்’ என்றார்.