76வது குடியரசு தினம் | குடியரசு துணைத் தலைவர், பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

புதுடெல்லி: 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது வாழ்த்துச் செய்தியில், “நமது 76வது குடியரசு தினத்தில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது சுதந்திர நூற்றாண்டின் இறுதி காலாண்டில் நுழையும் வேளையில், 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவை நனவாக்க உறுதியுடன் உழைப்போம். முதலில் தேசம் என்ற நமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் நங்கூரமிடுவோம்.

சமூக நல்லிணக்கம், குடும்ப விழுமியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி உணர்வு மற்றும் குடிமை கடமைகள் ஆகிய நமது நாகரிக நெறிமுறைகளை வளர்த்து, மலரச் செய்வோம். நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளின் உணர்வை மேம்படுத்துவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை நமது இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “குடியரசு தின நல்வாழ்த்துகள். இன்று, நமது குடியரசின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசியலமைப்பை வடிவமைத்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துகிறோம். நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் அமைவதை உறுதிசெய்வோம். இந்த இலட்சியங்களைப் பாதுகாப்பதிலும், வலுவான, வளமான இந்தியாவை கட்டமைக்க உழைப்பதிலும் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க இந்த சந்தர்ப்பம் நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.