Amazon Fab Fest Sale 2025: ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய ஒரு தொலைபேசியை வாங்க விரும்புகிறீர்களா? அதாவது, நீங்கள் ஒரு மல்டி-டாஸ்கிங் ஸ்மார்ட்போனை வாங்க விருப்பம் உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஒன்பிள்ஸ் நிறுவனத்தின் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்குவது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
OnePlus 13
OnePlus 13 ஸ்மார்ட்போன் பற்றி இந்த பதிவில் காணலாம். இது ஒரு பெரிய பேட்டரி, நல்ல கேமரா மற்றும் நல்ல செயல்திறனுடன் வருகிறது. இது சந்தையில் மிகவும் பிரபலமான ஒரு போனாக இருப்பதுடன் இதற்கான தேவை தற்போது அதிகமாகவும் உள்ளது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசானின் ஷாப்பிங் வலைத்தளத்திலிருந்து பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்று மலிவான விலையில் இதை வாங்கலாம். இதன் மூலம் ஆயிரங்களில் நாம் சேமிக்க முடியும்.
OnePlus 13: ஒன்பிளஸ் 13 விலை, தள்ளுபடி சலுகை
– இந்தியாவில் OnePlus 13 விலை 12GB RAM + 256GB சேமிப்பு வகைக்கு ரூ.72,999 ரூபாய் ஆகும். அமேசானின் இந்த விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.69,998 முதல் பெறலாம்.
– ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு (ICICI Bank Credit Card) பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.5,000 தள்ளுபடி பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் விரும்பினால், ரூ.22,800 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், அதாவது பரிமாற்ற சலுகையிலும் இதை வாங்கலாம். எனினும், இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
– இது மட்டுமல்லாமல், ரூ.3394 EMI விருப்பத்திலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அவை ஆர்க்டிக் டான், மிட்நைட் ஓஷன் மற்றும் பிளாக் எக்லிப்ஸ். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து ஆன்லைனில் வாங்கலாம்.
OnePlus 13: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களின் விவரங்கள்
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பெரிய 6.82-இன்ச் 2K+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 4,500 நிட்களின் பீக் பிரைட்னஸைக் கொண்டுள்ளது. இந்த போன் 120Hz உயர் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்புடனும் கிடைக்கிறது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 லைட் செயலியால் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் மற்றும் 1TB சேமிப்பகத்துடன் வருகிறது. இது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியுடன் வருகிறது. 100W SuperVOOC சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50MP சோனி LYT-808 பிரதான கேமராவுடன் வருகிறது. இது 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கு 32MP கேமரா உள்ளது.
இது தவிர, வாடிக்கையாளர்கள் OnePlus இன் பிற மாடல்களையும் வாங்கலாம். Amazon ஷாப்பிங் தளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி வாங்கலாம்.