`ஏமாற்றிவிட்டார்' – புகாரளித்த நடிகை; `அந்தத் தப்ப செய்யாதீங்க' கலங்கும்`காதல்' சுகுமார்

காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிப் பழகிவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிற துணை நடிகை ஒருவர், தன்னிடமிருந்து சுகுமார் ஏமாற்றிப் பறித்த நகை, பணத்தை மீட்டுத்தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக போலீசார் சுகுமாரை விசாரித்திருக்கிற நிலையில், சுகுமார் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘வெற்றி வேலப்பர்’ படக்குழுவின் யூ டியூப் சேனலிடம் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார் சுகுமார்.அந்த நேர்காணலில்,

”சமீப சில தினங்களா என்னைப் பத்தி வெளிவந்த செய்தியால் என் குடும்பத்தினர் ரொம்பவே காயப்பட்டுப் போயிருக்காங்க. சமூக வலைதளங்கள்லயும் சில யூ டியூப் சேனல்கள்லயும் என்னை ரொம்பவே மோசமானவனா சித்தரிச்சு செய்திகளை வெளியிட்டிருக்காங்க.

ஒரே துறையில் இருக்கிறவங்க பழகறது சேர்ந்து சமூக ஊடகங்கள்ல வீடியோ போடுறதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்கறதுதான். ஆனா எங்க பிரச்னைன்னா, நான் என் குடும்பத்தை விட்டுட்டு அவங்க கூடவே வந்து தங்கிடணும்னு சொன்ன போதுதான்.

பரஸ்பரம் ரெண்டு பேருமே ஏற்கெனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களுக்கு காலேஜ் போற பொண்ணு இருக்காங்க. எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. அதனாலதான் இந்த விவகாரம் தொடர்பா எதையும் வெளிப்படையாப் பேச நான் தயங்கினேன். ஆனா, அவங்கஇஷ்டத்துக்குப் பேசிட்டாங்க.

சுகுமார்

இப்ப நான் பக்திப் படம் ஒண்ணுல நடிச்சிட்டிருக்கிற நேரத்துல இப்படியான செய்தி என்னை நம்பிப் பணம் போட்ட தயாரிப்பாளர் உட்பட என்னுடைய ரசிகர்கள் எல்லார்கிட்டயுமோ ரொம்பவே கவலையை உண்டாக்கியிருக்கு.

ஒரேயொரு விஷயத்தை மட்டும் நான் இப்ப சொல்ல விரும்பறேன். இந்த விஷயத்துக்காக மனப்பூர்வமா நான் மன்னிப்பு கேட்கிறேன்.. இது எனக்கு நல்லதொரு பாடம். எனக்கு நிகழ்ந்த இந்த மாதிரி பிரச்னைகள் உங்க யாருக்கும் நிகழ்ந்துடாதபடி பார்த்துக்கோங்க. தயவு செய்து உங்களுடைய அந்தரங்க விஷயங்களைப் படமெடுக்க அனுமதிக்காதீங்க.

இப்படித்தான் வாழணும்னு நினைக்காம எப்படியும் வாழலாம்னு நினைச்ச எனக்கு சரியான அடி விழுந்திருக்கு. இந்த துயர நாட்கள்ல இருந்து சீக்கிரம் மீண்டு வரணும்னு கடவுளை வேண்டிக்கறேன்” எனக் கண்ணீர்  மல்கப் பேசியிருக்கிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.