புதுடெல்லி: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு தருணங்களில் அவரே நேரடியாக தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி கடமை பாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை வரவேற்க பிரதமர் மோடி சென்றார். அப்போது, வழியில் குப்பைகள் கிடந்தன. இதை பார்த்த பிரதமர், கீழே குனிந்து அதை எடுத்து. அருகில் இருந்த பாதுகாவலரிடம் கொடுத்து விட்டு, பின்னர் தன்கரை வரவேற்க சென்றார். சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.