மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை […]