தமிழக செஸ் வீராங்கனைக்கு கை கொடுக்க மறுப்பு.. உஸ்பெகிஸ்தான் வீரரால் வெடித்த சர்ச்சை!

நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் செஸ் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். 

இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீராங்கனை வைஷாலி நோடிர்பெக் யாகுபோவுக்கு கை கொடுக்க முன் வந்தார். ஆனால் நோடிர்பெக் அதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி தற்போது வைரலாகி வருகிறது.

A renowned Uzbek chess Grandmaster, Nodirbek, refused to shake hands with India’s Women’s Grandmaster Vaishali.

Does religion influence sports? However, he was seen shaking hands with other female players earlier. pic.twitter.com/fGR61wvwUP

— Ayushh (@ayushh_it_is) January 27, 2025

மேலும் படிங்க: காயத்தில் இருந்து இன்னும் மீளாத பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா? வெளியான தகவல்!

இது தொடர்பாக உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பென் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்; அன்பான செஸ் நண்பர்களே, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். 

Dear chess friends,
I want to explain the situation that happened in the game with Vaishali. With all due respect to women and Indian chess players, I want to inform everyone that I do not touch other women for religious reasons.#chess #fide #islam@ChessbaseIndia @Uzchesss

— Nodirbek Yakubboev (@NodirbekYakubb1) January 26, 2025

மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2023ஆம் ஆண்டில் திவ்யாவுடனான போட்டியில் இதுபோன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்றூ நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்வேன். 

நான் எதிர் பாலினத்தினருடன் கை குலுக்க் கூடாது என்றோ, பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ மற்றவர்களிடன் கூற மாட்டேன். என்ன செய்ய வேண்டும் என்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இன்று பல்மகாவிடம் இது பற்றி கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார். அரங்குற்கு வந்ததும் நான் அப்படி செய்யக் கூடாது என்றும் குறைந்தபட்ச வணக்கம் கூற வேண்டும் என கூறினர். போட்டி தொடங்குவதற்கு முன் திவ்யா மற்றும் வைஷாலியிடம் அதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலைகளுக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: “என் கல்யாணமே நின்றுவிட்டது”.. கதறும் நபர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.