பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.
சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
தேவாதிதேவர்களின் சேனைத் தலைவனாம் முருகப்பெருமானின் திருவுடலில் சகலமும் அடங்கியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. முருகப்பெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் மேருமலை, மந்தாரமலை, மாலியவான், விந்தியம், கந்தமாதனம், நிஷதம், சுவேதம், சிருங்கம், மகாகிரி, குமுதம், குமாரம், வெள்ளி, இமயம், ஏமகூடம், விபுலம், சுபாசுபம் என்ற பலகோடி மலைகள் காணப்பட்டன.
மற்ற திருவடியில் பாற்கடல், உப்புகடல், தயிர்க்கடல், தேன்கடல், சுத்தநீர்க்கடல் என 7 சமுத்திரங்களும், கெளதமி, சரஸ்வதி, கெளசிகி, கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, கம்பை, தாமிரபரணி, பம்பை, அமராவதி, மணிமுத்தாறு, பவானி, சூரி, சிகி, கிருஷ்ணா, துங்கபத்திரை, குசை, பாலாறு, பாஞ்சாலி, கோமதி, பாபவிநாசினி, சங்கவாகி, முதலான 108 நதிகளும் காணப்பட்டன.
ஸ்கந்தனின் கணுக்காலில் இருந்து அகத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர், விசுவாமித்திரர், காசிபர், பரத்வாஜர், கெளதமர், ஆங்கீரஸ், துர்வாசர், அத்திரி, பிருங்கி, பிருகு, ஸ்வேதர், உபமந்யர் உள்ளிட்ட ரிஷிகள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. கந்தனின் புகழ் கூடும் திருமலைகளில் தோரணமலை முக்கியமானது. தமிழகத்தில் குமரன் குடிகொண்ட தொன்மையானத் தலங்களுள் இதுவும் முக்கியமானது.
தென்பொதிகைச் சாரல் தபோவனர்களின் சரணிடம் என்றால் இந்த தோரணமலை சித்தர்களின் பொன்கூடாக விளங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அகத்தியரும் அவரது சீடர் தேரையரும் குடியிருந்த, இன்னமும் அரூபமாக உலவிவரும் மலையிது என்று போற்றப்படுகிறது.
இந்த மகாசங்கல்பத்தில் கலந்துகொண்டு பிரார்த்தித்தால் முருகப்பெருமானின் அருளால் கீழ்கண்ட 7 வித நலன்களை அடையலாம் என்கிறது தலவரலாறு. தைப்பூசத்தில் மனமகிழ்ந்து நடமாடும் முருகப்பெருமான், நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவான் என்பது நிச்சயம்.
1. ஞானமே வடிவமான ஞான பண்டிதன் உங்களுக்கு ஞானமும் நல்வித்தையும் அருளுவான்.
2. தேவர் தலைவனாம் கந்தன் நீங்கள் விரும்பிய உயர் பதவிகளை அடைய நிச்சயம் அருளுவான்.
3. எதிரிகளைப் பொடிப்பொடியாக்கும் வெற்றி வேல் முருகன் மலையென வரும் துன்பம் பனியென நீங்க வைப்பான் என்பதும் நிச்சயம்.
4. வசீகர அழகனாம் குமரனை வணங்கினால் அனைத்தும் வசமாக அருளுவான்.
5. வள்ளி தெய்வானை மணாளனாம் முருகப்பெருமானின் அருள் பெற்றால் இல்வாழ்க்கையில் இன்பம் பெறலாம் என்பதும் ஐதிகம்.
6. அறுபடை வீடுகளில் நிலைபெற்று அருளும் ஆறுமுகனின் அருளால் வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
7. ஆரோக்கியமும் ஆயுளும் கூடி எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க கந்தனின் அருள் நிச்சயம் உதவும்.
எனவே இந்த தோரணமலை மகாசங்கல்ப விழாவில் நீங்களும் பதிவு செய்து பலன் பெறுங்கள்!
சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த தோரணமலையில் உலக நன்மைக்காகவும், சக்தி விகடன் வாசகர்கள் நல வாழ்வுக்காகவும் வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு முருகப்பெருமான் திருக்கல்யாணம், சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் அனைத்து பாவங்களும் தோஷங்களும் நீங்கும். சகல நோய்களும் தீரும்; 16 வகை செல்வங்களும் சேரும். நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆனந்தமும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும் என்பது விசேஷம்.
வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த சங்கல்ப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விபூதி, ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.
சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07