அமெரிக்கா அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தியுள்ளது. ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ், அதன் வெளியுறவுக் கொள்கை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிற நாடுகளுக்கு அமெரிக்க நிதி உதவியை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களுக்கு ஏதாவது பிரதிபலன் கிடைக்கும் வரை, வெளிநாடுகளுக்கு இனி கண்மூடித்தனமாக நிதி உதவி வழங்க மாட்டேன் என்று ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். […]
