சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியைப் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.
ஐஐடி சென்னை, ஐஐடிஎம் பிரவர்த்தக், எஸ்ஏஇ இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. ஹைப்பர்லூப் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுடன், இந்த வகை போக்குவரத்துத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இப்போட்டி சென்னை ஐஐடி-ன் தனித்துவமான ஹைப்பர்லூப் சோதனை உள்கட்டமைப்பில் நடைபெறும். ரயில்வேத் துறை, ஆர்சிலார் மிட்டல், எல் அண்ட் டி, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைப்பர்லூப் என்பது வெற்றிடக் குழாயில் பயணிக்கும் அதிவேக 5-வது வகை போக்குவரத்து முறையாகும். ரயில் மணிக்கு 1000 கி.மீ. என்ற அதிவேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கடந்த 2013 ஆம் ஆண்டில் ‘ஹைப்பர்லூப் ஆல்ஃபா’ என்ற அறிக்கை மூலம் இக்கருத்தை முன்மொழிந்தார்.
இப்போட்டியின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி சென்னை ஹைப்பர்லூப் ஆலோசகரான பேராசிரியர் சத்யன் சக்ரவர்த்தி கூறுகையில், “சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும்போது மாணவர்கள் எந்த அளவுக்குச் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஹைப்பர்லூப் போட்டி ஒரு சான்றாகும்” என்றார்.
அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய ஹைப்பர்லூப் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக நீடித்த மற்றும் அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துவதுதான் இப்போட்டியின் இலக்காகும். புதுமையான கருத்துகள், கனவுகள், மாற்றங்களை ஏற்படுத்துவோரைச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்க வருமாறு ‘சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி 2025’ (Global Hyperloop Competition 2025) அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs