இந்திய மீனவர்கள் 13 பேருக்கு பிப்ரவரி 10 வரை நீதிமன்ற காவல் – இலங்கை கோர்ட்டு உத்தரவு

கொழும்பு,

காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், படகில் இருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மீனவர்களின் விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரை பிப்ரவரி 10-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.