உச்சகட்ட கோபத்தில் ரோஹித் சர்மா! பிசிசிஐயில் புகார்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரோகித் சர்மாவிற்கு சமீபத்தில் எந்த ஒரு தொடரும் சிறப்பாக அமையவில்லை. இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது. இது ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது எதிர்காலம் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டு முதல் டெஸ்டிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

தொடர் தோல்வியில் ரோஹித்

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் பேட்டிங்கில் 3 டெஸ்ட்களிலும் மொத்தமாக சேர்த்து 31 ரன்கள் மட்டுமே அடித்தார். இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரோகித் சர்மா கேப்டன் செய்த மூன்று டெஸ்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ரோகித் சர்மாவிற்கு தகுதி இல்லை என்றும் அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேறொரு வீரரை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

பிசிசிஐயிடம் புகார் அளித்த ரோகித்

சுனில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கள் ரோகித் சர்மாவை அதிகம் பாதித்ததாக கூறப்படுகிறது. தேவையில்லாமல் தன்னைப் பற்றி இப்படி அவதூறு பரப்புகிறார் என்று பிசிசிஐயிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளிப்புறங்களில் இருந்து வந்த இது போன்ற அழுத்தங்களால் தன்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. “சுனில் கவாஸ்கர் தன்னை எப்படி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரோஹித் சர்மா கருதுகிறார். அதனால் தான் பிசிசிஐயிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனால் பார்டர் கவாஸ்கர் தொடர் சமயத்தில் ரோகித் சர்மா அதிக அழுத்தத்தில் இருந்தார்” என்று மும்பை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் சர்மாவின் எதிர்காலம் என்ன?

பிசிசிஐயின் சமீபத்திய உத்தரவுபடி அனைத்து வீரர்களும் ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும். அதன்படி ரோகித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடினார். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பினர். இதனால் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் ரோஹித். இந்த தொடரின் முடிவுக்குப் பிறகு ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.