கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக பாலியல் தொழில் அதிகளவு நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சர்வதேச புரோக்கர்களின் நெட்வொர்க்குடன் ஸ்டார் ஹோட்டல்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் தொடங்கி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதுதொடர்பாக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சில முக்கிய டீம்களை கைது செய்துள்ளது. தற்போது அதே பாணியில் மற்றொரு டீம் பிடிபட்டுள்ளது.
காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்ஸி ஸ்டார் ஹோட்டல் முன்பு தனது நண்பரை பிக்கப் செய்வதற்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் அந்த ஹோட்டலில் இருந்த ஸ்பாவுக்கு அழைத்து சென்று மசாஜ் குறித்து கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் ஸ்பாவில் இருந்த பெண்களை காட்டி நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்து, ‘ஹேப்பி எண்டிங் சர்வீஸ் தருவதற்கு தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
இதற்காக ரூ.5,000 + ரூ.1,500 (அந்தப் பெண்ணுக்கு கமிஷன்) கட்டணம் என்று சொல்லியுள்ளார். அந்தப் பெண் அதனுடன் தங்களிடம் உள்ள மேலும் சில சர்வீஸ்கள் குறித்தும் விளக்கியுள்ளார். பதறிப்போன அந்த நபர் உடனடியாக ஸ்பாவில் இருந்து வெளியேறி தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பிறகு இதுகுறித்து பீளமேடு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸ் 6 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள், ரூ.87,620 ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs