மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுக்க கமிட்டி அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு

சென்னை: கடலில் பாலம் அமைக்​கும் திட்டம் உள்ளிட்ட தங்களது வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் திட்​டங்களை எதிர்த்து குரல் கொடுத்து பாது​காக்​கும் வகையில், ஒரு கமிட்​டியை அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு செய்​துள்ளன. சென்னை நொச்​சிக்​குப்பம் முதல் நீலாங்கரை வரை கடலில் 15 கி.மீட்டர் தூரத்​துக்கு பாலம் அமைக்​கப்​படும் என தமிழக அரசு அறிவித்​துள்ளது.

அரசின் இந்த அறிவிப்​பால் இப்பகு​தி​யில் வசிக்​கும் மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடி தொழில் பாதிக்​கும். இதனால், மீனவர்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்​கும். இதேபோல், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்​கரைக்கு நீலக் கொடி சான்​றிதழ் பெறும் திட்​டம், கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்​து​யிர் திட்டம் ஆகியவை செயல்​படுத்​தப்பட உள்ளது.

இதன்​காரண​மாக, திரு​வான்​மியூர் கடற்கரை பகுதி​யில் பெரிய வலைகள் மற்றும் மீன்களை உலர வைப்​ப​தற்கான இடம் சுருங்​கும் அபாயம் ஏற்பட்​டுள்​ளது. எனவே, மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் திட்​டங்களை எதிர்க்​கும் வகையில் ஒரு கமிட்டி அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளதாக மீனவர் சங்க பிரநிதிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.