இந்த மாதத் தொடக்கத்தில் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதில் இருந்து, ‘அடுத்த கனடா பிரதமர் யார்?’ என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்த ரேசிலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ஒருவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லா.
பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் அவர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமராக கனடாவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன். இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பும் தனது தேர்தல் பிரசாரத்திலும், தற்போதும் இதே கொள்கையோடு தான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரூபி தல்லா, “மிக்க நன்றி. கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றிகடன் பட்டுள்ளேன். முதல் வேற்று நிறத்தை (கனடா அல்லாத) சேர்ந்த பெண்ணை லிபரல் கட்சியின் தலைவராகவும், அடுத்த கனடா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தருணத்தில் இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
இவருடைய இந்த முன்னெடுப்புகள் கைக்கொடுக்குமா…லிபரல் கட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்குமா என்ற கேள்விக்கு பதில் வரும் மார்ச் 8-ம் தேதி கிடைத்துவிடும்.
As Prime Minister, I will deport illegal immigrants and clamp down on human traffickers.
That’s my promise to you.
En tant que Premiére ministre, je vais expulser les immigrants illégaux et sévir contre les trafiquants d’êtres humains.
C’est ma promesse envers vous. pic.twitter.com/T69pISQlXS
— Ruby Dhalla (@DhallaRuby) January 28, 2025
Thank you. #LetsMakeHistory pic.twitter.com/s35GuD6kHp
— Ruby Dhalla (@DhallaRuby) January 27, 2025