புதுடெல்லி,
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளு மன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 11 மணிக்கு இருஅவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்று கிறார்.அதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.
2025-26ம் நிதியாண்டுக் கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி (சனிக் கிழமை) தாக்கல் செய்யப் படுகிறது. நிா்மலா சீதா ராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்று கிறார்.அதைத் தொடா்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். மேல் சபையில் இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விவாதங்களுக்கு மேல் சபையில் பிப்ரவரி 6-ந்தேதி பிரதமா் நரேந்திர மோடி பதில் அளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் 9 அமா்வுகளுடன் பிப்ரவரி 13-ந்தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
சனிக்கிழமை தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. வருமான வரி வரம்பு குறித்த எதிர்பார்ப்பு மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருக்கிறது.ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
பல தனிநபர்கள் தங்கள் சொந்த நகரத்தை விட்டு வேறு நகரத்தில் பணிபுரிவதற்காக கணிசமான வாடகை செலவு ஏற்படுகிறது. எனவே புதிய வரி விதிப்படி வீட்டு வாடகைப்படி விலக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு, பொருளாதார வளர்ச்சி பல காலாண்டுகளில் மிகக்குறைந்த அளவில் இருப்பதால் பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக் கும் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பட்ஜெட் இருக்கும். விவசாயிகள் முதியவர்கள், சிறு தொழில்களுக்கு சலுகைகள் அளிக்கப்படலாம்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளி நாட்டினர் மசோதா. அதி காரப்பூர்வ ரகசிய மசோதா, பண மோசடி தடுப்பு சட்ட திருத்தம், வங்கி மற்றும் காப்பீட்டு மசோதா, உயர் கல்வி மசோதா, வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான திரு மண பதிவு மசோதா உள்ளிட்ட 62 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.