வகுப்பறையில் மாணவனைத் திருமணம் செய்தாரா பேராசிரியை? வைரலான வீடியோ – என்ன நடந்தது?

மேற்கு வங்க மாநிலம், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில், பேராசிரியை முதலாமாண்டு மாணவரைத் திருமணம் செய்வதுபோல பரவிய வீடியோவால், பல்கலைக்கழக நிர்வாகம் அந்த பேராசிரியையை விடுப்பில் அனுப்பிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், Applied Psychology துறையின் பேராசிரியை மணக்கோலத்தில், மாணவருடன் ஒருவரையொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். மாணவரும் பேராசியைக்கு நெற்றியில் மூன்று முறை திலகமிட்டார்.

மேற்கு வங்கம்

மேலும், இருவரும் ஒருவரையொருவர் கணவன் மனைவியாக 7 ஜென்மத்துக்கு ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. ஜனவரி 16 என்று தேதியிட்டிருந்த அந்தக் கடிதத்தில் சாட்சிகளாக சிலரின் கையொப்பங்களை இருந்தன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவிய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் பேராசிரியையை விடுப்பில் அனுப்பியிருக்கிறது.

இருப்பினும், இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் விளக்கமளித்த பேராசிரியை, “இது இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஃபிரஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் செய்த நாடகம். எனக்கெதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இது வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டிருக்கிறது. என்னை அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் போலீஸில் புகாரளிப்பேன்.” என்று கூறினார்.

மேற்கு வங்க

மறுபக்கம், இதுபற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஊடகத்திடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி, “இதில் எந்தவொரு ஒழுக்கக்கேடான நடத்தையும் இல்லை என்று பேராசிரியை கூறியிருக்கிறார். இருப்பினும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருப்பதால், குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையில் விடுப்பில் செல்லுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டோம்.” என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இதை அவர் நியாயப்படுத்த முடியாது என்று, அவருக்கெதிராக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகாரளித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.