ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? – அதில் இணைவது ஏன் கடினம்?

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அமெரிக்க சினிமாட்டோகிராப்பர் சொசைட்டி (ASC) என்ற உலகப் புகழ்பெற்ற சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார்.

இந்த நிகழ்வைத் தற்போது அவர் பணியாற்றிவரும் லவ் இன்சூரன்ஸ் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஒளிப்பதிவாளர்களுக்கு ASC-யில் இணைவது கனவாக இருக்கும்.

ASC

ஓப்பன்ஹெய்மெர் பட ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோய்டெமா, எல்விஸ் பட ஒதிப்பதிவாளர் மேண்டி வால்கர், டூன், பேட் மேன் படங்களின் ஒளிப்பதிவாளர் கிரேக் ஃப்ரேசர் உள்ளிட்ட பல ஆஸ்கர் வென்ற ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த சங்கத்தில் மொத்தம் 400 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

1919ம் ஆண்டு ஹாலிவுட் ஒளிப்பதவாளர்கள் இணைந்து ஒளிப்பதிவாளர்களுக்கிடையில் பொதுவாக இருக்கும் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளவே ASC தொடங்கப்பட்டது. ஆனால் இன்று உலகின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்கள் இணைந்து தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு ஒளிப்பதிவு என்ற கலையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் அமைப்பாக உருமாறியிருக்கிறது.

Ravi Varma

ASC உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றுள்ளார். இதற்கு முன் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தச் சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதில் உறுப்பினராக இணைவது ஒவ்வொரு இளம் ஒளிப்பதிவாளருக்கும் கனவாக இருந்தாலும், யாருக்கும் அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடாது.

எப்படி இணைவது?

ASC -ல் இணைய ஒருவர் குறைந்த பட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.

தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரப்படங்கள், சினிமா, ஆவணப்படங்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள் எதுவானாலும் கலைநயத்துடன், தொழில்நுட்ப நிபுணத்தன்மையுடனும் படைப்பு அமைந்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே ASC-ல் உறுப்பினராக இருக்கும் 3 நபர்கள் (குறைந்தபட்சம்) உங்கள் படைப்பின் சிறப்புகளை விளக்கி உங்களை பரிந்துரைத்து கடிதம் எழுத வேண்டும்.

அதன்பிறகு உங்கள் படைப்புகளை ASC மெம்பர்ஷிப் கமிட்டி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.