ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்​டங்​களில், 876 கிராமங்​களில் 3 – 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இதில் 35 சதவீதம் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடிய​வில்லை. 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவி​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என கூறப்​பட்​டுள்​ளது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்​கின்​றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்​பிடு​கிறது.

உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்​நாடு பின்​தங்கி இருப்​பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு, ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்​போது முறையாக நிரப்​பப்​படாதது, ஆயிரக்​கணக்கான பள்ளி​களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்​பது, சமவேலைக்கு சம ஊதியம் அளிக்​காதது தான் காரணம். எனவே மாணவ, மாணவியகளின் நலனைக் கருத்​தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.