'சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமாக இருக்கிறது' – ஜிஎஸ்டி குறித்து விஷால்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு  நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

நாளை நடக்கும் மத்திய பட்ஜெட்டில் சினிமா துறையின் எதிர்பார்ப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஷால்,  “திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது வருத்தமாக உள்ளது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது.

விஷால்
விஷால்

மத்திய பட்ஜெட்டில் சினிமா துறைக்கு நல்லது அறிவித்தால் பஸ் பிடிச்சு வந்தாவது நிதியமைச்சருக்கு நன்றி சொல்வோம்” என நடிகர் விஷால் கூறியிருக்கிறார். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி உடன் இணைய இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “கூடிய சீக்கிரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்”  என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.