“பிரபாகரன் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செஞ்சார்?" – ம.நீ.ம.விலிருந்து விலகிய வினோதினி

‘மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்’னு சொன்னதைப் பார்த்ததும், கட்சியில் ஏதோ பிரச்னை போலன்னு பதறினா, அறிவிப்புக்குப் பின்னாடி அப்படி எதையும் காணோமே” என்ற கேள்வியுடம் நடிகை வினோதினி வைத்தியநாதனிடம் பேச்சைத் தொடங்கினோம்.

”தெரியும். இப்படிப் பதறுவீங்கன்னு தெரியும். ஆனா நான் வெறும் பரபரப்புக்காக அப்படிச் செய்யல. ஒரு வேலையைச் செய்யணும்னு ஆர்வத்தோட போறோம். கொஞ்ச நாள் கழிச்சு அதுல ஒரு சுணக்கம் தெரியுது. அந்த இடத்துல இருக்கிறவங்க நம்மைக் கேக்குறாங்களோ இல்லையோ, நமக்கே கொஞ்சம் உறுத்தல் வருமில்லையா? அப்படியான உறுத்தல் வந்தது. அதே நிலையைத் தொடர அனுமதிக்க வேண்டாமேன்னு முடிவு செய்தேன். மத்தபடி உள்ளுக்குள் எந்த ஒளித்து வைக்கப்பட்ட அஜென்டாவும் இல்லை.

வினோதினி
வினோதினி

அந்த சுணக்கம் ஏன் வந்தது?

நான் வெளியிட்டிருந்த பதிவில் தெளிவாச் சொல்லியிருப்பேன். கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கேன். அப்ப எல்லாம் பெருந்தன்மையோட எனக்குப் புரிய வச்சிருக்காங்க. யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள் பல எனக்குக் கிடைச்சது. தலைவரோடு நேரடியா உரையாட, கேள்வி கேட்க, பல நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கன்னு! ஆனா அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதுக்காக யாரையும் நான் கோவிச்சுக்கக்கூடாது. அது முறையுமில்லை. கடந்த ஒன்னரை வருஷம் என் உழைப்பும் பணமும் என்னுடைய சொந்த வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெரு விலங்குகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கும் மட்டுமே போயிருக்கு. இதைத் தாண்டி ஒரு வேலையைச் செய்யணும்னு நினைச்சுட்டு அதைச் செய்ய முயற்சிக்காத சோம்பேறியா இருந்தா நல்லாவா இருக்கு? அதனாலதான் இந்த முடிவு. மத்தபடி எந்தவித புற அழுத்தங்களும் இல்லை”

‘கமல்ஹாசனைத் தவறவிட்டது தமிழ்நாடு’னு சொல்லியிருக்கீங்க. அவர் தமிழ்நாட்டு மக்களின் சமீபத்திய முக்கிய பிரச்னைகளான அண்ணா பல்கலை  மாணவி விவகாரம், பரந்தூர் விமான நிலைய விவகாரம்னு எந்த விவகாரம் குறித்தும் பேசவே இல்லையே?

மக்கள் நீதி மய்யம் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அங்கங்க நீங்க சொன்ன இந்த விஷயங்கள் குறித்துப் பேசினாங்க. எல்லாத்துக்கும் தலைவர் தான் பேசணும்னு எதிர்பார்க்க முடியாதில்லையா? ஆனாலும்  இது தொடர்பா கட்சியின் அடிப்படை உறுப்பினரா எனக்கு வருத்தம் இருந்தது. அவர் கொஞ்சம் பேசியிருக்கலாம்கிறது என் தனிப்பட்ட கருத்து.

விஜய் அரசியலுக்கு வர்றதை எப்படிப் பார்க்குறீங்க?

தமிழக வெற்றிக் கழகம்

யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம். அவர் வர்றதுல என்ன பிரச்னை? வர்றது சரி. வந்த பிறகு செயல்பாடு எப்படியிருக்கும்கிறதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்

இப்ப எங்க பார்த்தாலும் பெரியார் பத்தின பேச்சாவே இருக்கே?

சீமான், ரஜினி

“பெரியார் அவர் காலத்துல பெரிய ஆளுமையா இருந்திருக்கார். தமிழர்களுக்கா, தெலுங்கர்களுக்கானு பார்க்காம திராவிடம்னு அவர் போராடினார். இன்னொரு பக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடினார் பிரபாகரன். இவங்க ரெண்டு பேரையும் ஒப்பிடறதே கூடாதுனு சொல்வேன். ரெண்டு பேரும் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவங்க. அண்ணன் சீமான் பிரபாகரனை உயர்த்திச் சொன்னா சிலர் கேக்கற அந்தக் கேள்வியை எனக்குமே கேக்கணும்தான் தோணுது. அதாவது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அவர் என்ன செஞ்சார்ங்கிறதுதான் அது.

என்னைக் கேட்டா பி.ஜே.பி முதல்ல தலைவர்  ரஜினியை இறக்க நினைச்சது. அது ஒர்க் அவுட் ஆகலை. அடுத்து அண்ணாமலையை  கூப்பிட்டுட்டு வந்தாங்க. அவருமே கட்சி குறித்துப் பேச வச்சார். ஆனா ரெண்டு சீட் பிடிக்க மூடியலை. அதனால இப்ப பெரியாரைத் தொட்டா திராவிடக் கட்சிகளைக் காலி செய்யலாம்னு நினைச்சு அண்ணன் சீமான் மூலமா அதுக்கு முயற்சிக்கறாங்களோன்னு நினைக்கத் தோணுது”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.