Chief Dating Officer : பெங்களூரில் காதலில் கைதேர்ந்தவருக்கு வேலை; தகுதி என்னவென்று தெரியுமா?!

காதலர் தினம் நெருங்குவதனால் காதலைச் சுற்றிய விநோதங்கள் நம் கண்முன் வந்து விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காதலில் கைதேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் யாவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

தலைமை டேட்டிங் அதிகாரி (Chief Dating Officer) என்ற வேலையை அறிமுகப்படுத்தியுள்ளது, பெங்களூரைச் சேர்ந்த ஓர் ஆலோசனை நிறுவனம்.

இந்த வேலையைப் பெறுவதற்கு பெரிய கல்வித்தகுதி எல்லாம் வேண்டாம். மொழி புலமை மட்டுமே போதும் என்கின்றனர். என்ன மொழியா… ‘காதல் மொழி’தான்!

நவீன காதல், காதல் தோல்வி, டேட்டிங் ஆப்கள் போன்றவற்றில் கைதேர்ந்த ஒருவரைத் தேடுகிறது Topmate நிறுவனம்.

இந்த வேலை தான் காதலிக்கிறோமோ இல்லையோ, காதல் ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நண்பர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

Dating

“இன்றைய டேட்டிங் கலாசாரத்தில் கரைந்து தேர்ச்சி பெற்ற ஒருவர் எங்களுக்குத் தேவை. ‘ghosting,’ ‘breadcrumbing,’ உள்ளிட்ட அனைத்து காதல் சொற்களையும், செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளும், ‘ஜோடிகளை சேர்த்து வைப்பவராக’ நீங்கள் இருந்தால் உங்களை வலதுபக்கம் ஸ்வைப் செய்கிறோம் (தேர்ந்தெடுக்கிறோம்).” என இந்த வேலை குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் கீழ்காணும் 3 தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

1. குறைந்த பட்சம் ஒரு பிரேக்-அப், இரண்டு சிட்டுவேஷன்ஷிப் (situationship), மூன்று டேட்டிங்களை கடந்து வந்திருக்க வேண்டும்.

2. இன்றைய டேட்டிங் குறித்து ஆழமான அறிவு வேண்டும். புதிய ட்ரெண்டை உருவாக்ககும் கிரியேடிவிட்டி இருக்க வேண்டும்.

3. குறைந்து 2,3 டேட்டிங் ஆப்களை பயன்படுத்திய அனுபவம் இருக்க வேண்டும்.

டாப்மேட் நிறுவனத்தின் விருப்பமான விண்ணப்பதாரர் ஒரு டேட்டுக்கான வாய்ப்பைப் பெறுவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.