Vishal : 'நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்; ஏனெனில்..!' – விஷால் ஓப்பன் டாக்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு  நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

`சில யூடியூபர்ஸ் தொடர்ச்சியாக உங்களை பற்றியும், சினிமா பிரபலங்கள் சிலரையும் தவறாக பேசுகிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியத்திற்கு பதிலளித்த விஷால், “ என்னுடைய ஆரோக்கியம் பற்றிய உச்சக்கட்ட கற்பனை செய்தார்கள். நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவது தவறான விஷயம். உங்களுக்கும் பெண் குழந்தைகள் மனைவிகள் இருப்பார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். 

விஷால்
விஷால்

உங்களுக்கு வியூஸ் மூலமாக பணம் வருகிறது என்பதற்காக மற்றவர்களை தவறாக பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஒரு படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச இங்கு யாருக்கும் உரிமை இல்லை.  சில பேர் எல்லாம் மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள் அதை எல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதைத் தவிர்க்க வேண்டும்.” என்றார்.  

இதனைத்தொடர்ந்து, “2026 தேர்தலில் உங்களை அரசியல் களத்தில் எதிர்பார்க்கலாமா?” என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  “நான் திரும்பவும் நவம்பர் டிசம்பரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன். அதற்கென்று ஒரு நேரம் இருக்கிறது. இப்போது வரிசையாக எனக்கு படங்கள்தான் தெரியும்.  நான் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு கட்சி, இன்னொரு கொடி… அரசியல்வாதிகள் எல்லாம் நல்லது செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப்போகிறோம்.

விஷால்
விஷால்

நீங்கள் சரியாக செயல்படாததை நாங்கள் கண்ணால் பார்க்கிறோம். சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் சில கிராமங்களில் குடிநீர் வசதி இல்லை. சாலை வசதி சரியில்லாமல் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப்போகிறோம். எங்கள் நடிப்பு தொழிலைப் பார்க்க  சென்றுவிடுவோம். நடிகர்கள் அரசியல் வாதியாக மாறுவதற்கு அவர்கள்தான் வழிவகுக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.