இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை தொடங்கி வைத்தார் அமித் ஷா

இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாரத மண்டபத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்தே, இண்டர்போல் போன்று பாரத்போல் போர்ட்டல் … Read more

பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில்

பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக் கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ் சாலையில், சென்னை யிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரிய பாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த … Read more

Live : Srirangam Ranganatha Swamy Temple Vaikunda Ekadasi Utsav | பரமபத வாசல் திறப்பு |

108 திவ்ய தேசங்களில் முதன்மையான உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து ராப்பத்து உற்சவத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம். Source link

விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் புஸ்ஸி ஆனந்த்: ஆடியோ கசிந்ததால் தவெகவில் சலசலப்பு

நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் வலதுகரமாக இருந்து வரும் தவெகவின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் குறித்து ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக கூறப்படும் … Read more

டெல்லியில் நலத்திட்டங்கள் அறிவிக்க கூடாது: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பட்ஜெட்டில் டெல்லி யூனியன் பிரதேசத்துக்குரிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தலைமைத் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம்!

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகிகள் 20-ந்தேதி முதல் பிரசாரம்  மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5-ந்தேதி  வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ந்தேதியும் வாக்கு எண்ணிகையும் நடைபெற உள்ளது. இந்த  இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தகவல்கள் வெளியாக உள்ளது. … Read more

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக ‘தகவல் தொழில்நுட்ப வெளியும்’ ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து … Read more

பொதுமறையான திருக்குறளை பரப்ப உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள்: பிரதமர் மோடி உறுதி

உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தினத்தையொட்டி ஒடிசா தலைநகர் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளை இழந்துள்ளனர். பசிபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் காட்டுத் தீ முதன்முதலில் ஏற்பட்டுள்ளது. பிறகு, … Read more

யுஜிசியின் புதிய விதிகள்: நாளை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை:  யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,  நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேதர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. … Read more