எக்ஸ் சமூக ஊடகத்தில் எலான் மஸ்க்கின் பெயர், புகைப்படம் மாற்றம்

நியூயார்க், உலக பணக்காரர்களில் ஒருவர் மற்றும் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார். அவருடைய இந்த திடீர் மாற்றம், அவரை பின்பற்றக்கூடிய கோடிக்கணக்கானோரிடையே கவனம் பெற்றுள்ளது. இதேபோன்று, அதில் உள்ள புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, பெப் தி பிராக் என்ற தவளையின் படம் இடம் பெற்று உள்ளது. தங்க கவசம் அணிந்து, … Read more

Share Market : `2025' பங்குச்சந்தையும்… போக்கை நிர்ணயிக்கும் `5' காரணிகளும்! – விளக்கும் நிபுணர்!

‘2025-ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது?’ என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கும். ஆரம்பத்தில் நன்கு சென்றுகொண்டிருந்த பங்குச்சந்தை, கடந்த சில மாதங்களாக இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும். ‘இந்த ஆண்டு பங்குச்சந்தை எப்படி இருக்கலாம்?’, ‘எதில் முதலீடு செய்யலாம்?’ போன்றவற்றை விளக்குகிறார் Equinomics Research நிறுவனர் மற்றும் பங்குச்சந்தை நிபுணர் G.சொக்கலிங்கம். பங்குச்சந்தை நிபுணர் G.சொக்கலிங்கம் “2024-ம் ஆண்டு செப்டம்பர் வரை, சென்செக்ஸ் 18 … Read more

சென்னை​யில் நாளை முதல் 25 புறநகர் மின் ரயில்​ நேரம் மாற்றம்

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் பல்வேறு மார்க்கங்களில் நாளை முதல் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று (ஜன.1) அமலுக்கு வருகிறது. சில மெயில், விரைவு ரயில்களின் நேர மாற்றம் இதில் இடம்பெறுகிறது. இதையடுத்து, பயணிகள் வசதிக்காகவும், இயக்க காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் … Read more

அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம்

ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில், அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருந்த போதிலும், மின்வாரியம் டெண்டரை ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்பிரிவில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்குப் பதிலாக, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கான மின்இணைப்புகளை தவிர மற்ற அனத்துப் பிரிவுகளிலும் உள்ள மின்இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீ்ட்டர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, மத்திய அரசின் உதவியுடன் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 3 … Read more

இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்! முக ஸ்டாலின் எத்தனையாவது இடம் தெரியுமா?

2023-24 நிதியாண்டின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட தனிநபர் நிகர வருமானம் ரூ. 1,85,854 ஆக உள்ளது, அதே சமயம் மாநில முதல்வர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது.

பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகாததற்கு இதுதான் உண்மையான காரணமா?

Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அணியில் முகமது ஷமி! ரோஹித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைவு

சென்னை இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அவ்வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்கின்றன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் … Read more

கேரளா: மேடையில் இருந்து கீழே விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோழிக்கோடு, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் எலும்பு முறிவு, ரத்த … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி … Read more