லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளை இழந்துள்ளனர். பசிபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் காட்டுத் தீ முதன்முதலில் ஏற்பட்டுள்ளது. பிறகு, … Read more

யுஜிசியின் புதிய விதிகள்: நாளை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை:  யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,  நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேதர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. … Read more

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இன்று தொடங்குவதாக இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: ஸ்​பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்​கும் என்று இஸ்ரோ அறிவித்​துள்ளது. இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலை​யத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​ணில் நிறுவமுடிவு செய்​துள்ளது. இதற்கான முன்னேற்​பாடுகள் தற்போது மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்​டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்​டத்​தின்​கீழ் விண்​வெளி​யில் விண்​கலன்களை ஒருங்​கிணைக்​கும் பரிசோதனையை மேற்​கொள்ள இஸ்ரோ முடிவு செய்​தது. இதற்காக வடிவ​மைக்​கப்​பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, … Read more

ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவ காப்பீடு: டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தகுதி … Read more

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர். மி​யான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்​டத்​துக்​குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் ராணுவம் பணிந்து ஜனநாயக ஆட்சிக்கு வழிவட்​டது. கடந்த 2015-ம் ஆண்டில் பொதுத்​தேர்​தலில் ஆங் சான் சூச்​சி​யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது. கடந்த 2021-ம் ஆண்டில் ராணுவம் மீண்​டும் ஆட்சியை கைப்​பற்றியது. தற்போது … Read more

பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் அளிக்காதது குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை பொங்கலுக்கு ரொக்க பணம் அளிககாதது குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, … Read more

2025 சுசூகி ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 வெளியானது.!

2025 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஜிக்ஸர் 250 மற்றும் ஃபேரிங் ஸ்டைல் ஜிக்ஸர் SF 250 என இரண்டிலும் OBD-2B ஆதரவினை பெற்ற எஞ்சினுடன் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1.98 லட்சம் முதல் ரூ.2.07 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு 250சிசி பைக்குகளும் புதிதாக மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் பிளாக் எண்.2/ மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட், மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ/பேர்ல் … Read more

டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம்: பொங்கல் பரிசுத் தொகுப்பை திரும்ப ஒப்படைத்த கிராம மக்கள்!

மதுரை: டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுடன் பேசிச் சென்ற பின்னர், அக்கிராம மக்கள் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு விநியோகம்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கி வருகிறது. அதனை முன்னிட்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் இன்று (ஜன.9) ரேஷன் கடைகள் … Read more

கேரளாவின் மசூதியில் நடந்த விழாவில் மிரண்ட யானை தாக்கி ஒருவர் காயம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் என்ற இடத்தில் மசூதியில் நடைபெற்ற விழாவில் யானை ஒன்று மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயம் அடைந்தனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திருரில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு புதியங்காடி என்ற விழா நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு 5 அலங்கரிக்கப்பட்ட யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. திருவிழாவில் பங்கேற்ற … Read more