மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

இம்பால், மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னு, சாய்ரல் மற்றும் காக்சிங் குனோ பகுதியில் வசிப்பவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, காங்போக்பி மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். அதில் ஒரு ஹெக்லர், ஜி3 ரைபிள், … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த பரபரப்பான 15-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் – கோனாசிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தியது. 4-வது லீக்கில் ஆடிய தமிழ்நாடு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். தமிழ்நாடு அணியில் ஜிப் ஜேன்சென் 3 கோலும், கார்த்தி செல்வம், சுதேவ், நாதன் தலா … Read more

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்' – அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். அண்ணாமலை ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார். முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி … Read more

யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு

சென்னை: யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “யுஜிசி வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மாநில அரசுக்கு பிப்.5-ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நீக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். அதற்குள்ளாக தீர்மானம் கொண்டு வருவது சரியானதல்ல என்பதால் வெளிநடப்பு செய்தோம்” என்று … Read more

‘‘21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது’’ – பிரதமர் பேச்சு

புவனேஸ்வர்: 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திறன்நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவஸ்) பேசிய பிரதமர் மோடி, “21ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்னும் பல தசாப்தங்களுக்கு உலகின் இளமையான, திறன்மிக்கவர்கள் உள்ள நாடாக இந்தியா திகழும். திறமையானவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா … Read more

நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி…? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?

India National Cricket Team: இந்தியா அணியின் டெஸ்ட் சீசன் முடிந்துவிட்டது. இனி ஜூன் மாதம்தான் இந்திய டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதுவும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2025-27 சுழற்சியின் கீழ் வந்துவிடும். மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் மே இறுதி வரை நடைபெறும் எனலாம்.  இந்நிலையில், தற்போது இந்திய அணியின் வொயிட் பால் சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் மற்றும் … Read more

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறு, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று … Read more

இந்துத்துவா மீது தீவிர பக்தி… மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழச்சி நடைபெற உள்ளது. இந்த வருடம் கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் என்றும் கூறினார். இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக … Read more

விஜய் ஹசாரே கோப்பை: பிளே-ஆப் சுற்றில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்

வதோதரா, 32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் குஜராத் , மராட்டியம் , கர்நாடகா, பஞ்சாப, விதர்பா , பரோடா ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. 2-வது இடம் பிடித்த அரியானா , ராஜஸ்தான், தமிழ்நாடு, பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டன. இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (வியாழக்கிமை) இரண்டு பிளே-ஆப் … Read more