Aadhav Arjuna : 'பொறுமையா போ..' – விஜய் கட்சியில் இணைந்த ஆதவ்வுக்கு திருமா அறிவுரை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். விஜய் கட்சியில் இணைந்த கையோடு திருமாவளவனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. ஆதவ் விஜய்யுடன் கடந்த சில நாட்களாக ஆதவ் அர்ஜூனா தரப்பு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று மதியம் விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஆதவ் அர்ஜூனா. விஜய்யை சந்தித்து அரைமணி நேரம் உரையாடியவர், தவெக கட்சியிலும் … Read more

தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்: நீதிமன்றம் சொல்வது என்ன?

தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான … Read more

‘நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ – சோனியா கருத்துக்கு பாஜக எதிர்வினை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜகவினர் இக்கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இது போன்று பேசுவதை பாஜக சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறோம். குடியரசுத் தலைவர் திரவுபதி … Read more

ஜெகதீச பாண்டியன் நா த க வில் இருந்து விலகல்

சென்னை நாதக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இவர் போட்டியிட்டவர் ஆவார். ,நாம் தமிழர் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், தன் மீது அவதூறு பரப்புகின்றனர் என்றும் இதனல் தாம் கட்சியில் இருந்து விலகுவதாகவும் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார். … Read more

கோவில்களில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

புதுடெல்லி, கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி விஜய் கிஷோர் கோஸ்வாமி என்பவர் சுப்ரீம் கோர்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மாநில அரசுகள் உரிய முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். தினத்தந்தி … Read more

4-வது டி20: ஹர்திக், துபே அதிரடி.. இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

புனே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரை … Read more

மலேசியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மலேசியாவில் உள்ள பார்னேவில் பெய்து வரும் தொடர் மழையால், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இன்றும் கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தினத்தந்தி … Read more

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' – ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு, ‘இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை!’ என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார். ஆதவ் திருமாவளவன் பேசுகையில், ‘ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் … Read more

காலை உணவு திட்டம்: சென்னை மேயர் பிரியா விளக்கம் 

சென்னை: சென்னையில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் உடல் நலன் காக்கவும், சோர்வின்றி கல்வி கற்கவும் ஏதுவாக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் … Read more

ஈரானில் 3, ரஷ்யாவில் 16 இந்தியர்கள் மாயம் – மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம்

புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள், ரஷ்யாவில் காணாமால் போன 16 இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் உரையாடினர். இந்தியா -அமெரிக்கா … Read more